இறுதிக்கட்டத்தில் தேசிய தலைவரை கொலை செய்யுமாறு சம்பந்தன் கூறினாரா! சிறீதரன் வெளியிட்ட தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை கொலை செய்யுமாறு மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் கூறியதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்தில் உண்மைத் தன்மை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தன் உள்ளிட்ட இலங்கையின் தமிழ் தலைவர்கள் மற்றும் கருணாநிதி, ஜெயலலிதா,ஜெயசங்கர் போன்றோருடனும் சந்தித்து கலந்துரையாடியாதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் குறிப்பிட்ட நபர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லாததால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை கொல்லுங்கள் சர்வதேசம் எமக்கு நீதியைத் தரும் என சம்பந்தன் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறுதி யுத்தம் நடக்கும் காலப்பகுதியில் சம்பந்தனுக்கு சர்வதேச தரப்புக்களால் சில செய்திகள் சொல்லப்பட்டுள்ளதா என்பது குறித்து தமக்கு தெரியாது எனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தின் உண்மைத் தன்மை குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சி.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
