பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கையை காப்பாற்ற இந்தியா வழங்கியுள்ள உறுதிமொழி
பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விரைவாக இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் அவர் ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பிய பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் பணத்திற்கு எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. வங்கி ஒன்றினால் வழங்கப்படும் கடன் தொகை வகையிலேயே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் நெருக்கடியில் உள்ளார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். கூடிய விரைவில் இதற்கான தீர்வு வழங்கப்படும். விரைவில் நீண்ட வரிசைகள் முடிவுக்கு வரும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
