பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் காணாமல் போனோர் விவகாரம்....!
காணாமல் போனோருக்கான தீர்வை இன்றுவரை வழங்காத இலங்கையில், சீன முதலீட்டை ஊக்குவிப்பதற்காக செயற்பட்டதாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் மீது பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோன் மெக்டொனாஹ் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில், சியோன் மெக்டொனாஹ் இன்று (23.11.2023) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“டேவிட் கமரூன் இணைந்து பணியாற்றிய சீன கன்ஸ்ட்ரக்சன் கம்யூனிகேஷன் என்னும் நிறுவனம் அமெரிக்கா மற்றும் உலகவங்கியால் இலஞ்ச குற்றச்சாட்டின் காரணமாக கருப்புபட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனமாகும்.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்! பெஞ்சமினின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை (Video)
தீர்க்கப்படாத இலங்கையின் பிரச்சினைகள்
இலங்கை போர் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, 2009இல் போர் முடிவடைந்த போதிலும் காணாமல் போனோருக்கான தீர்வை இன்றுவரை அளிக்காமல் உள்ளது.
இந்நிலையில், டேவிட் கமரூன் பணத்திற்காக சீன அரச நிறுவனமொன்றுடன் இணைந்து, சீனாவின் முதலீட்டில் துறைமுகம் ஒன்றினை கட்டுவதற்கு இலங்கையை ஊக்குவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், டேவிட் கமரூன் பிரித்தானிய மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் சீன அரசாங்கத்தின் பணியாளரா என்பது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை பிரித்தானிய மக்களுக்கு உண்டு” என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |