பிரித்தானியா, கனடா மற்றும் பல நாடுகளில் இலக்கு வைக்கப்படும் டயஸ்போராக்கள்! காரணம் யார்?
இலங்கையை பொறுத்தவரையில் 44இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் இருக்கின்றார்கள் என பொருளாதார ஆய்வாளர் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கிலே இருக்கக்கூடிய ஊடகவியலாளர்களை முழுமையாக ஒடுக்குகின்ற, நசுக்குகின்ற செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் உளவியல் ரீதியாக முன்னெடுத்து வந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புலம்பெயர் தேசங்களில் இருக்கக்கூடிய ஈழத்தமிழர்களின் பலமான பல செயற்பாடுகள் மனித உரிமைகள் சார்ந்தும் அறம் சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இவற்றினை முழுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்குவது அல்லது திசை திருப்பும் பல நடவடிக்கைகள் சமகாலத்தில் முன்னெடுக்கப்டப்டு வருகின்றன.
இவை தொடர்பாகவும் பொருளாதார ஆய்வாளர் பாலகிருஸ்ணன் விரிவாக எம்மோடு பகிர்கையில்,