இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் (Video)
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு கோரி ஜெனிவாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜெனிவா கூட்டத்தொடர் இன்று கூடும் நிலையில், காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான சட்டத்தரணி நுவன் போபகே மற்றும் ஷெஹான் மாலக்க ஆகியோர் இன்று ஜெனிவா மாநாட்டில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இன்றைய தினம் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றது இக் காணொளி,

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
