எம்.பி பதவியில் இருந்து நீக்கப்படும் டயனா கமகே- தயாராகிறது கடிதம்
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) சம்பந்தமாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க அந்த கட்சியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இரத்துச் செயப்பட்டுள்ளதாக அறிவிக்கும் கடிதம் ஒன்றை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய டயனா கமகேவை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
டயனா கமகேவை கட்சியில் இருந்து நீக்கும் யோசனை செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாக டயனா கமகே, அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டார்.
அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று விசாரணைக்குழு விசாரணைகளை நடத்தியது.
ஒழுக்காற்று விசாரணைக்குழு நடத்திய விசாரணையின் அறிக்கையானது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டது என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசாங்கம் கொண்டு வந்த 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
அந்த தீர்மானத்தை மீறி, டயனா கமகே, ஆளும் கட்சியுடன் இணைந்து திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதன் பின்னர் ஆளும் கட்சியில் இணைந்துக்கொண்டார்





வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri
