டயானா கமகேவின் பதவி தொடர்பான விவகாரம்: உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ள மனு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான தீர்ப்பை ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த மனுவையும் சமூக ஆர்வலர் ஒசாலா ஹோர்த் தாக்கல் செய்யவுள்ளார்.
எனினும் மற்றொரு சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக டயானா கமகே தெரிவித்துள்ளார்.

நீதியரசர்களின் மாறுபட்ட தீர்ப்பு
முன்னதாக மூன்று நீதியரசர்களை கொண்ட அமர்வு, இராஜாங்க அமைச்சரின் வழக்கில் இரண்டு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியது, இரண்டு நீதியரசர்கள், அவர் நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வகிக்க தகுதியானவர் என்று அறிவித்தனர்.
எனினும் ஒரு நீதியரசர் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
நீதியரசர் மரிக்கார் இந்த தீர்ப்பை வழங்கினார்.
அவரே, இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, 2020இல் நாடாளுமன்ற உறுப்பினராக
பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற தீர்ப்பையும் வழங்கியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam