பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்: ஜனாதிபதியின் மௌனம் ஏன்..! தயாசிறி பகிரங்க கேள்வி

President of Sri lanka Dayasiri Jayasekara Kumara Jayakody
By Rakesh Mar 14, 2026 11:48 AM GMT
Report

சபாநாயகர் மற்றும் அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மௌனம் காப்பது ஏன் என எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. எமது நிறுவனச் சட்டக்கோவையின் 27ஆவது பிரிவின்படி, ஓர் அரச அதிகாரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அவர் உடனடியாகப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்.

மத்திய கிழக்கில் உச்சம் தொடும் போர்ப் பதற்றம் : ஈரானின் உயிர்நாடியை தாக்கி அழிக்கவுள்ள அமெரிக்கா

மத்திய கிழக்கில் உச்சம் தொடும் போர்ப் பதற்றம் : ஈரானின் உயிர்நாடியை தாக்கி அழிக்கவுள்ள அமெரிக்கா

அரச அதிகாரிகள்

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 162ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி, அமைச்சர்கள் என அனைவரும் 'அரச அதிகாரிகள்' என்ற வரைவிலக்கணத்துக்குள் அடங்குவர்.

எனவே, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதாகக் கூறும் ஜனாதிபதி, உடனடியாகக் குமார ஜயகொடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தற்போதைய சபாநாயகருக்கு எதிராகப் பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 125 மற்றும் 127ஆவது பிரிவுகளின்படி, தன் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளபோது அது குறித்து ஊடக சந்திப்புகளை நடத்துவது சட்டவிரோதமானது.

பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்: ஜனாதிபதியின் மௌனம் ஏன்..! தயாசிறி பகிரங்க கேள்வி | Dhayasiri Jayasekara Quesioned About Anura

கலாநிதி பட்டம் இல்லை

ஆனால் சபாநாயகர் அதனைச் செய்துள்ளார். பல குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவர் சபாநாயகராகச் செயல்படும்போது, அவரிடமிருந்து எமக்கு நீதி கிடைக்காது. நாடாளுமன்றத்தில் நாம் பேச முற்படும்போது எமக்கு இடமளிக்கப்படுவதில்லை.

முன்னைய சபாநாயகர் ஒருவர் கலாநிதி பட்டம் இல்லை என்ற காரணத்துக்காக நீக்கப்பட்டார். ஆனால், இன்றைய சபாநாயகர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் பதவியில் நீடிக்கின்றார்.

Khamenei is back..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

Khamenei is back..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

தனது நண்பர் என்பதற்காகக் குமார ஜயகொடிக்கு அமைச்சுப் பதவியை வழங்கிய ஜனாதிபதி, தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்ன கூறப்போகின்றார்? முறைகேடுகளில் தொடர்புடையவர்களை உடனடியாகப் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும். எமது அரசின் கீழ் சபாநாயகருக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US