சுகாதார சீர்கெட்டுடன் இயங்கி வரும் தருமபுர சந்தை
கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள தருமபுரம் பொதுச் சந்தை அண்மைக்காலமாக உரிய முறையில் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாரத்தில் இரு நாள் அல்லது ஒரு நாளே கழிவற்றல் நடைபெறுவதாகும் இதன் காரணமாக சந்தை பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகளின் உறைவிடமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரும் அசோகரியங்கள்
தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன் ஆங்காங்கே கால்நடைகளின் எச்சங்களும் மழையில் கரைந்தோடி நாளாந்தம் கொள்வளவு செய்யவருவோர் பெரும் அசோகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |