சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்!
சிங்கப்பூர் நாட்டின் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் முறைபடி பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரின் இஸ்தானா மாளிகையில் இன்று இரவு 08.00 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றுக் கொண்டார்.
பதவிக்காலம்
இந்த விழாவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், சிங்கப்பூரின் அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கமைய, சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் 2029 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி வரை சுமார் 6 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
