சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக நாளை பதவியேற்கும் யாழ்.தமிழர்
சிங்கப்பூர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட தர்மன் சண்முகரத்னம் 24.8 இலட்சம் வாக்குகளில் 17.46 இலட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சிங்கப்பூா் ஜனாதிபதியாக அந்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பதவியேற்பு விழா
இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக அவர் நாளை (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஊரெழுப்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும், துணை பாதுகாப்பு அமைச்சராகவும், துணை பிரதமராகவும் தர்மன் சண்முகரத்தினம் பதவி வகித்து வந்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கெபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
