தேர்தலை நிராகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் தமிழ் மக்கள்! தமிழர் தரப்பில் கருத்து
இலங்கையில் சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்படும் வரையில் ஜனாதிபதி தேர்தல் உட்பட எந்த தேர்தலானாலும் நிராகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் (Dharmalingam suresh) தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பினை தடுக்க, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் மட்டுமல்ல எந்தவொரு அமைப்பினாலும் முடியாது.
சமஸ்டி கட்டமைப்பு
அதனால், நாட்டில் ஒற்றையாட்சி கட்டமைப்பு நிராகரிக்கப்பட்டு சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்படும் வரையில் ஜனாதிபதி தேர்தல் உட்பட எந்த தேர்தலானாலும் நிராகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை தீர்மானிப்பது என்பது இந்தியாவின் ஒரு திட்டம். எனவே, இது தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |