நான்கு மணி நேரம் வாக்குமூலம்! CCIDயிலிருந்து வெளியேறிய தனசிறி அமரதுங்க
புதிய இணைப்பு
தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (CCID) வெளியேறியுள்ளார்.
சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் மத்திய குற்றப்பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க, இன்று (01) அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) முன்னிலையாகியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.