கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் கட்டாயம் போட்டியிடுவேன்..! முன்னாள் எம்.பி தெரிவிப்பு
கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் நானும் கட்டாயம் போட்டியிடுவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று(01.09.2026) வாழைச்சேனையில் அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வேட்பாளராக
பல்வேறு சமகால அரசியல், தொடர்பாக கருத்துக்களை கூறிய அவர் மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது.

மாகாணசபை தேர்தல் நடத்தும் திகதி அறிவிப்பு, வேட்புமனு கோரல் அறிவிப்பு வருமானால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவதாகவும் அது இந்த ஆண்டில் நடைபெ வாய்புகள் இல்லை என குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு(2027) நடைபெறலாம் என எதிர்பார்க்கிறேன்
அப்படி நடந்தால் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டாயம் கிழக்கு மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குவேன். என்னை எவரும் தடுக்கமுடியாது எனவும் உறுதியுடன் கூறியுள்ளார்.