நாடாளுமன்ற உறுப்பினராகும் தொழில் அதிபர்! அமைச்சராவாரா...!
தம்மிக்க நாடாளுமன்ற உறுப்பினராகிறார்
தொழில் அதிபரான தம்மிக்க பெரேரா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற தரப்புக்கள் இன்று தெரிவித்துள்ளன.
பெரேராவின் பதவிப் பிரமாண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இன்று மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சு வழங்கப்படுமா?
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு பதிலாக அவர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வரவுள்ளார்.
இந்தநிலையில் பெரேராவுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படாது என்று ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுக்கு உறுதியளித்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படுமா? என்று நேற்றைய ஆங்கில செய்தித்தாள் கேள்வி எழுப்பியிருந்தது.
தம்மிக்க பெரேரா குறித்து வெளியான விசேட வர்த்தமானி
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan