கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விரைந்த யாழ்.பக்தர்கள்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து பக்தர்கள் இன்று மதியம் புறப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து வடதாரகை படகில் 78 பேரும், கடற்படைக்கு சொந்தமான ஜெட் படகில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேருமாக 88 பேர் புறப்பட்டுள்ளனர்.
கச்சதீவில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெறவுள்ள இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான சினேகபூர்வ கலந்துரையாடலில் கலந்து கொள்ளுவற்காக வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் 10 பேர் சென்றுள்ளனர்.
அத்தோடு குறித்த பயணத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக
அதிகாரிகளும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



