கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டம்
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (22) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் திருகோணமலை கல்வி திணைக்களக் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் அமைச்சின் கீழுள்ள மற்றும் அதனுடன் இணைந்த மாகாண விளையாட்டு திணைக்களம், கலாச்சார திணைக்களம் மற்றும் மாகாண முன்பள்ளி காரியாலயத்தின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இதன்போது, கிழக்கு மாகாணக் கல்விச்செயலாளர் கே.குணநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாணக் கலாச்சார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










