சிறையில் இருந்து வெளியே வந்ததும் தாக்குதல் - இருவரும் பொலிஸாரால் கைது!
வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன் இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியில் இந்த சம்பவம் இன்றையதினம்(7) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் கைது
நீண்ட காலமாக இருந்துவந்த காணி தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய இருவரையும் வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யாரு பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
