போராட்டத்தின் இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்

Northern Province of Sri Lanka Protest
By Theepan Aug 20, 2026 02:41 PM GMT
Report

கடந்த திங்கட்கிழமை (17.08.2026) தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான தீர்வு கிடைக்கும் வரை எவ்வித விட்டுக்கொடுப்புகளுமின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் வாயிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு நெருக்கடி

நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநருடன் இடம்பெற்ற சந்திப்புக்கும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது போராட்டத்தின் பிரதான கோரிக்கையான, குறித்த அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் | Development Officers Union Vows Continue Protest

இதனை தமது சக உத்தியோகத்தர்கள், போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்திணைக்களத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, வடக்கு மாகாணம் முழுவதும் மாகாண மற்றும் மத்திய சேவைகளில் கடமையாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமது சங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி தமது செயற்பாடுகள் தொடரும் எனவும், போராட்டத்தின் இலக்கை அடைவதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் சங்கம் அறிவித்துள்ளது.

முறையான அழைப்பு

இதேவேளை, நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்ட கலந்துரையாடலுக்கு வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தமது போராட்டத்தையும் மலினப்படுத்தும் நோக்கில் பிரதான தொழிற்சங்கமான தங்களை தவிர்த்து பிறிதொரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

போராட்டத்தின் இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் | Development Officers Union Vows Continue Protest

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் ஆளுநர் முன்னெடுக்க மாட்டார் என தாம் நம்புவதாகவும், ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர்,

தமக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் நேர்மையான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என ஆணித்தரமாக நம்புவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

“வாய்மையே வெல்லும்” என்ற நோக்குடன் தமது செயற்பாடுகள் தொடரும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் விகாரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி பலி

ஞானசார தேரரின் விகாரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி பலி

மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஹரக் கட்டா வழக்கு! தீவிரமான சட்டப்போராட்டம்

மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஹரக் கட்டா வழக்கு! தீவிரமான சட்டப்போராட்டம்

Gallery
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US