அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் இணைக்குமாறு கோரிக்கை
கடந்த 6 வருடங்களுக்கு மேலாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை பட்டதாரி ஒன்றியத்தின் தலைவர் க.அனிரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(10.10.2026) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வித்துறையையும், பல்கலைக்கழக பட்டம் முடித்து சேவையாற்றும் பட்டதாரிகளையும் நோக்கும் போது, அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒருபக்கச் சார்பாக அமைந்துள்ளனவோ என்ற கேள்வி எழுகின்றது.
அரசாங்கம் நடவடிக்கை
இது கடந்த கால அரசியல் பழிவாங்கல்களின் தொடர்ச்சியா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.
கடந்த கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சியின் போது நாடளாவிய ரீதியில் 53,000 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு, முறையான பயிற்சிக்குப் பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகக் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் பணிகளை ஆற்றி வருகின்றனர்.

அவர்களை நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு சேவைப் பிரமாணக் கோவை (தடையாக இருப்பதாகக் கடந்த காலங்களிலும் தற்போதும் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பல்கலைக்கழகங்களில் கல்வியியல் பட்டம் முடித்தவர்களை நேரடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்காக ஆசிரியர் சேவைப் பிரமாணக் கோவையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கௌரவ பிரதமர் அறிவித்துள்ளார்.
கல்வியியல் பட்டதாரிகளுக்காகச் சேவைப் பிரமாணக் கோவையை மாற்ற முடியுமென்றால், 6 வருட காலக் கற்பித்தல் அனுபவத்தைக் கொண்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், எந்தவொரு முரண்பாடுகளுமின்றி மிக விரைவில் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri