இலங்கையில் கோர விபத்து - பிரித்தானிய பிரஜை பலி - பெண் உட்பட மூவர் காயம்
பாணந்துறை, பின்வத்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற வெளிநாட்டவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சிறு குழந்தை உட்பட மேலும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 70 வயதுடைய பிரித்தானிய பிரஜை என்று பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணி
இரண்டு சுற்றுலாப் பயணிகளுடன், இரண்டு இலங்கையர்களும் ஒரு சிறு குழந்தையும் அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்று பாலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், பெலியத்தவிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்ற போது பதற்றமடைந்த குழு, ரயில் பாதையை விட்டு வெளியேற முயன்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.
வெளிநாட்டுப் பெண்
வெளிநாட்டு பிரஜை ரயிலில் மோதி பின்வத்த கால்வாயில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஏனையவர்கள் ரயில் பாலத்திலிருந்து பின்வத்த கால்வாயில் குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டது.
எனினும் அவர்களில், ஒரு வெளிநாட்டுப் பெண், மற்றொரு சிறு குழந்தை மற்றும் ஒரு ஆண் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.