கந்தளாயில் அழிவடையும் குடியிருப்பு காணிகள்: பாராமுகமாக செயற்படும் அதிகாரிகள்(Video)
கந்தளாய் கோவில் கிராம மக்களின் குடியிருப்பு காணிகள் அழிவடைந்து போவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, கோவில் கிராம மக்களின் காணிகள் ஆற்று நீரால் அரிப்புக்கு உள்ளாகி, இடிந்து, அழிவடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆறு, தம்பலகாம பிரதேச விவசாய காணிகளுக்கு கந்தளாய் குளத்திலிருந்து கந்தளாய் கோவில் கிராமம் ஊடாக கொண்டு செல்வதால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குறித்த ஆறு ஓடுகின்ற இடங்களில் காடுகள் வளர்ந்தும், சில இடங்களில் மரங்கள் விழுந்தும் இருப்பதால் நீர் சீராக செல்ல முடியாது தடைபடுவதே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
மேலும், கூறுகையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |