பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விவரம் விரைவில் அம்பலம்
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விவரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் நாடாளுமன்றத்தில் விரைவில் வெளிப்படுத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
பாதுகாப்பு நடவடிக்கை
அதன் அடிப்படையில் துப்பாக்கிதாரிகள் மற்றும் அவர்களை இயக்கியவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன்.

மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கை சம்பந்தமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்துவார்.
அத்துடன், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் தொடர்பான விவரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விரைவில் நாடாளுமன்றத்தில் வெளியிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri