அரசாங்கத்தினால் அதிகரித்த செலவினங்கள்: மொட்டுக்கட்சி வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டுக்கு 388 இலட்சம் செலவழிக்கப்பட்டுள்ளதாக மொட்டு கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி அரவிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,

குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போதே அநாவசிய அரச செலவினங்களை குறைப்பதாக குறிப்பிட்டது. ஆனால் அவர்களாலே அந்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சுகததாச அரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாட்டுக்கு கலந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கான டிசேர்ட் வழங்குவதற்காக 118 இலட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகை தந்தவர்களுக்கான உணவுக்காக 33 இலட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அமைச்சர்களால் 37 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரச செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri