அடுத்து இலக்கு வைக்கப்படும் தமிழர் - வெளிவரும் பயங்கர தகவல்கள்!
படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் நெருங்கிய நண்பரான கணேஷ் என்பவர் அடுத்து கொலை செய்யப்படவுள்ளார் என புலனாய்வு பத்திரிகையாளர் சாலிய டி ரணவக்க வெளிநாட்டிலிருந்து புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பில் நடந்த கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் சர்வஜன அதிகாரம் கட்சியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் புஸ்பகுமார பெட்டகேவும் கொலை தொடர்பில் பல தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
கொலைக்கான காரணம்
இது தொடர்பில் பத்திரிகையாளர் சாலிய டி ரணவக்க தொடர்ந்து கருத்து தெரிவித்த போது,
“கணேஷ் என்பவர் சாரதியாகவும் பணியாற்றியுள்ளார். 'சன்சையின் சுந்தா'வை அடித்து சிறைச்சென்றவரும் இவர்தான். 'அரக்கட்டா' 'மிதிகம ருவான்' லசந்த விக்ரமசேகர அல்லது லசந்த ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதோடு உறவினர்கள் ஆவர்.
இந்தக் கூட்டணி சேர்ந்து செய்த போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பல குற்றச் செயல்களில் சேர்த்த சொத்துக்கள் பணம் முழுவதும் தமிழரான கணேஷிடமே இருந்துள்ளது.
அதாவது, கறுப்பு பணத்தை இவரே வெள்ளையாக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 'அரக்கட்டா' 'மிதிகம ருவான்' ஆகியோரின் பாதாள குழுக்களே இணைந்து லசந்த விக்ரமசேகரவை வெலிகம பிரதேச சபைக்கு போட்டியிடவும் அவரை தலைவராக்கவும் பெரும் முயற்சியெடுத்துள்ளது.
லசந்த விக்ரமசேகர, பிரதேச சபைத் தலைவரான பின்னர் இந்த குழுவினரிடமிருந்து ஒதுங்கியிருந்துள்ளார். மேலும், அதன் பின்னர், அவர் சிலரின் கொமிசன் பணம் வழங்கவில்லை என்ற குழப்பமும் கோபமும் பாதாள குழுக்களுக்கு இருந்துள்ளது.
ஏனென்றால், கணேஷ், லசந்த விக்ரமசேகரவுடனேயே இருந்துள்ளார். அண்மையில் லசந்த விக்ரமசேகர கணேஷுக்கு அவரின் பெயரில் ஹோட்டல் ஒன்றும் வாங்கி கொடுத்துள்ளார். அதனால் கணேஷிடம் இந்த பணம் இருப்பதால் கட்டாயம் அடுத்து இவர் கொல்லப்படுவார்.
மேலும் ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் இன்னும் தெரியவரவில்லை. வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர அல்லது 'மிதிகம லசா' மாணிக்கக்கல் தோண்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கொலை செய்வதற்கான திட்டம்
கெக்குனதுரோ இந்திக்கவுக்கு தான் இந்த கொலைக்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. அவர் வெளிநாட்டில் இருக்கிறார். இவர், 'மிதிகம ருவானின்' நண்பராவார்.
துப்பாக்கித்தாரிகள் ஹகங்கம பகுதியில் இருந்து வந்து வெலிகம பிரதேச சபையை தாண்டி சென்று, பொல்லத்துமோதர பாலத்திற்கு அருகில் தான் துப்பாக்கிகளை பெற்றுக் கொள்கின்றனர்.
அந்தப் பகுதியில் சீசீரிவி கமராக்கள் இல்லை. பின்னர் சபைக்கு காலை 10.25 மணிக்கு வருகின்றனர். பாவிக்கப்பட்டுள்ள துப்பாக்கி ரிவோல்வர் வகையானது. அதனால் தான் ரவைகள் வெளியில் வீசப்படவில்லை.
சீசீரிவி தெளிவில்லாத பகுதியில் தான் உள்ளே நுழைகிறார். இவர்கள் நன்றாக பயிற்சி பெற்ற துப்பாக்கித் தாரியாவார். அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் இராணுவத்தில் இருக்கிறார்.
கையில் பிளாஸ்டார் ஒட்டியிருந்தார். ஏனென்றால் யாரும் அவரை பிடித்தால் கைவிரல் அடையாளம் தெரியாமல் இருப்பதற்கு தான். ஏனென்றால் இவரின் கைவிரல் அடையாளம் பொலிஸில் இருப்பதால் ஆகும்.

துப்பாக்கிதாரி தப்பிச் செல்லும் போது பொல்லத்துமோதர பாலத்திற்கு அருகில் துப்பாக்கியை கையளிக்க சென்றுள்ளார். 'மிதிகம லசா' ஊகிக்க முடியாத ஒரு பாத்திரமாவார். சில நேரம் அவரின் கெப் வாகனத்தை வரச் சொல்லிவிட்டு பேருந்தில் செல்வார்.
அத்தோடு அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாது. வீட்டில் இருக்க மாட்டார். இவர் ஒரு இடத்தில் இருக்கிறார் என நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது. 'மிதிகம ருவானின்' துப்பாக்கிகளை காட்டிக் கொடுத்தது லசா என்று அவர்கள் நம்புகின்றனர்.
வெலிகம பகுதியில் சேர்ப்பிங் விளையாட்டு நடக்கும் இடத்தில் பாதாள குழுக்கள் ஒன்று கூடுவர். இங்கு லசாவின் ஆட்களுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த கோபத்தில் துப்பாக்கிகளை காட்டிக் கொடுத்ததாக நம்பினர்.
இந்தியாவில் இருந்து வந்த தொலைபேசி
இந்தியாவில் இருந்து லசந்தவின் மனைவிக்கு 21ஆம் திகதி வந்த தொலைபேசி அழைப்பில் 22ஆம் திகதி லசந்தவை கொல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியும் அவரை போக வேண்டாம் என தெரிவித்த நிலையில், அவர் தனது குழந்தையை தூக்கிக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் மனம் மாறிய நிலையில் அவரின் கெப் வாகனத்தில் தனது சாரதியுடன் வழமையாக வரும் வழியை விடுத்து சபைக்கு வந்துள்ளார்.
அவருக்கும் இந்தியாவில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. ஆனால் அவர் அதை எடுக்கவில்லை என அவரின் நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
வாகனத்தை பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிள்கள்
டபல் கெப்பில் தலைவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இரு மோட்டார் சைக்கிள்கள் மிக வேகமாக வந்துள்ளது. வாகனம் 10 கிலோ மீட்டருக்கும் அதிக வேகத்தில் சென்ற போதும், மோட்டார் சைக்கிள்கள் வந்துள்ளன.
அப்போது வேகத்தை அதிகரித்து சென்று பொலிஸ் காவலரணில் இது தொடர்பில் தெரிவித்த பின்னர் சைக்கிள் வரவில்லை என அதில் சென்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தும் போது அவரின் அறையில் மூவர் இருந்துள்ளனர். அவர்கள் இதை நேரடியாக பார்த்துள்ளனர். தலைவர் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிந்தார்.
விசேட அதிரடிப்படையினரும் இவரை தேடிக் கொண்டிருந்தனர். தலைவராகும் சந்தர்ப்பத்தில் இவரின் வீட்டை சிறு குழுவினர் சுற்றிவளைத்திருந்தனர்.
அப்போது மரணவீட்டுக்கு கூட நாம் போகவில்லை. எங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |