இராணுவத்தினர் வெளியேறிய காணியில் வளங்கள் அழிப்பு!
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் கிராமத்தில் நிலைகொண்ட இராணுவத்தினர் காணியினை விட்டு வெளியேறிய பின்னர் அங்குள்ள தேக்குமரங்கள் சிலரால் அறுக்கப்பட்டு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசந்தபுரம் கிராமத்தில் விடுதலைப்புலிகளின் வனவளத்திணைக்களத்தினரின் பண்ணையாக காணப்பட்ட 20 ஏக்கர் காணியில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினர் முகாம் அமைத்து வசித்து வந்துள்ளார்கள்.
திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை
இந்தநிலையில் 14 ஆண்டுகளின் பின்னர் 28.10.2024 அன்று இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
குறித்த காணியில் பயன்தரு மரங்கள் அதிகளவில் காணப்படும் நிலையில் தற்போது 25 வரையான தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் ஏற்றப்பட்டுள்ளன.
எனினும், இந்த நடவடிக்கை தொடர்பில், சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து பிரதேசவாசிகளிடம் கேட்டபோது, இவ்வாறு சட்டவிரோதமாக மரம் ஏற்றுபவர்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
