கொழும்பிலுள்ள வீடொன்றில் வெளிநாட்டு பெண்களுடன் சிக்கிய பிரபல கோடிஷ்வரர்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ பகுதியில் நடத்தப்பட்டு வந்த மசாஜ் நிலையம் ஒன்று நேற்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட இரண்டு தாய்லாந்து பெண்களும் முகாமையாளரும் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இரண்டு தாய்லாந்து பெண்களும் 28 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெண்களின் சேவை
அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் இந்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை பெறப்பட்ட சுற்றுலா விசாக்களில் நாட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இந்த நிலையத்தின் முகாமையாளராக பணியாற்றிய நபர் ராகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பல்வேறு பணக்கார தொழிலதிபர்கள் இந்த பெண்களின் சேவையை தேடி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு பெண்ணின் சேவைக்கு 10,000 முதல் 20,000 ரூபாய் வரை பல்வேறு தொகைகளை வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.