ஆப்கானிஸ்தானில் துப்பாக்கித்தாரிகளின் அட்டகாசம்: குறைந்தது 10 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) நஹ்ரின் மாவட்டத்தில் உள்ள ஒரு வணக்கத்தலத்தில், துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதச் சடங்கில் பங்கேற்ற சூஃபிகள் என்ற இஸ்லாம் மத பிரிவினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
பாதிக்கப்பட்ட தேசம்
தலிபான்கள், 2021 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று நாட்டைக் கைப்பற்றினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தேசத்திற்கு பாதுகாப்பை மீட்டெடுப்பதாக சபதம் செய்தனர்.
எனினும் அங்கு தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த தாக்குதல்களில் பெரும்பாலானவற்றுக்கு, தீவிரவாத இஸ்லாமிய அரசான ஐஎஸ்ஐஎஸ் குழுவின் உள்ளூர் பிரிவினரே உரிமை கோரியுள்ளனர்.
முன்னதாக, செப்டம்பரில், மத்திய ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 38 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
