இரு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில்
டிப்பர் - லொறி இரண்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து பொலன்னறுவை - திம்புலாகலை பிரதேசத்தில் நேற்று (08.01.2026) இரவு ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணை
திம்புலாகலை பிரதான வீதியில் அதிவேகமாகப் பயணித்த டிப்பர் வாகனம் வீதியின் நெறிமுறையை மீறி லொறி வந்த பாதையில் நுழைந்ததால் இந்த விபத்து சம்பவித்துள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியான 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், டிப்பர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 25 வயது இளைஞரும், லொறியின் சாரதியான 37 வயது குடும்பஸ்தரும், அவரின் உதவியாளரான 24 வயது இளைஞருமான என மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் திடீரென களத்தில் இறங்கிய அதிகாரிகள்.. அச்சத்தில் பதறியடித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள்