ஆளும் கட்சிக்குள் முரண்பாடா! ரில்வின் விளக்கம்
ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உட்கட்சிக்குள்ளேயே ஒரு குழு செயற்படுவதாக வெளியாகும் செய்திகளை அவர் நிராகரித்துள்ளார்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகளால் உருவாக்கப்பட்ட "வேடிக்கையான நகைச்சுவை" என குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தை மையமாகக் கொண்ட குழுவொன்று பிரதமரின் செயல்பாடுகளைச் சீர்குலைக்க முயல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளார்.

"எதிர்க்கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்வது உண்மையில் எங்களுக்கு மிகவும் சாதகமானது" எனவும் "யாரும் நம்பாத அடிப்படையற்ற புனைவுகளை மட்டுமே நம்பியிருப்பது அவர்களுக்கே பாதகமாக முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் பத்து ஆண்டுகள் கழிந்தாலும் அந்த யதார்த்தம் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றை உண்மையில் பிரிக்க முடியாது எனவும் வானவில்லைப் போல எங்களைப் பிரித்துக் காட்டுவதற்கு ஒரு கோடு வரையக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தீவிர பிரசாரங்கள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அமரசூரிய உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு இடையிலான உறவு ஆழமான பரஸ்பர அன்பிலும் நம்பிக்கையிலும் கட்டியெழுப்பப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவை ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சக்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் பழிவாங்கலாகக் கூறவே கூடாது! முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு