தேசபந்து தென்னக்கோன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகலாம்..
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை இன்று(06.03.2025) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.
இதனையடுத்து, தேசபந்து தென்னகோன் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு வீடுகளை பொலிஸார் சோதனையிட்ட போதிலும் அவர் எந்த வீட்டிலும் இருக்கவில்லை.
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்
தொடர்ந்து, தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்து வருவதாக இலங்கை பொலிஸார் அறிவித்தனர்.
மேலும், தேசபந்து தென்னக்கோன் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும், கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் இதுவரை நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஷ்யாவின் இளைஞர்படை ராணுவத்தில் உக்ரேனியர்கள்! நாசவேலை முயற்சியை முறியடித்ததாக அறிக்கை News Lankasri

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam
