சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேசபந்து
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon), இன்று(19) மாலை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு வெலிகம, பெலேன பிரதேசத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை
நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்து வந்த அவர், இன்றைய தினம் சட்டத்தரணிகள் ஊடாக மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், நாளைய தினம்(20) வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து இன்று மாலை தேசபந்து தென்னகோன், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்குள்ள சாதாரண சிறைக்கூடம் ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri