நாட்டின் போராட்ட சூழலால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை (Photos)
கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலக கோரி இன்று கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் பல இடம்பெற்றன.
இந்நிலையில் மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட அவர்களின் அன்றாட இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய வர்த்தக நிலையங்கள், வீதிகள் உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் இன்று(9) மூடப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு பெரும்பாலான வர்த்த நிலையங்கள் இன்று(9) திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் வங்கிகள் எதுவும் திறக்கப்படவில்லை.
திருகோணமலை போன்ற தூர இடங்களுக்கு செல்லும் ஒரு சில அரச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.
திருகோணமலை
திருகோணமலையில் மக்கள் நடமாட்டமில்லாத முடக்க நிலையொன்று காணப்படுகின்றது.
பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் உட்பட மருந்தகங்களும் மூடப்பட்ட நிலையிலேயே இன்று(9) காணப்படுகின்றன.
பிரதான பேருந்து நிலையத்திலிருந்து மட்டுப்படுதப்பட்ட அளவிலேயே பயணிகள் பேருந்து சேவை இடம்பெறுகிறது.
நகர வீதிகளில் மட்டுமல்லாமல் உள்வீதிகளிலும் மிக குறைந்த அளவிலேயே மக்கள் நடமாட்டம் காணப்படுகின்றது.
செய்தி: பதுர்தீன் சியானா
கோட்டா - ரணில் வீட்டுக்கு செல்ல வேண்டும்: போராட்டத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேகா |
மலையகம்
மலையக பகுதியில் பொது போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும், கொழும்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் இன்று(09) மலையகப்பகுதியில் பொதுபோக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.
ஹட்டன் நகரிலிருந்து இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இதனால் ஹட்டன் பஸ் தரிப்பு நிலையம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹட்டன் நகரம் உட்பட பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் முற்றாக அடைக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் நகரில் சதொச வர்த்தக நிலையங்கள், மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் தவிர ஏனைய அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் நகரில் மயான அமைதி நிலவியுள்ளது.
மலையக பகுதியில் வழமையாக 16 புகையிரத சேவைகள் இடம்பெறுகின்ற நிலையில் நேற்று(8) பொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அதிகாலை வேளையில் உடரட்டமெனிக்கே, பொடிமெனிக்கே ஆகிய இரண்டு புகையிரத சேவைகளை தவிர ஏனைய புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவைகள் இல்லாததன் காரணமாக புகையிரத நிலையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொது மக்களே பயணம் செய்கின்றனர்.
ஹட்டன் நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: மலைவாஞ்சன்



