இனப்பிரச்சினைக்கு அரசமைப்பின் ஊடாக நிரந்தர தீர்வு உறுதி! பிரதி அமைச்சர் பிரதீப்
இலங்கையில் நீண்ட காலமாக நிலவும் இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு ஊடாக நிரந்தர தீர்வு காணப்படும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், அரசமைப்பு உருவாக்கும் பணிகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்புப் பணிகள் ஆரம்பம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் பிரச்சினைகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படவில்லை.

இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அநுரவின் அரசில் தமிழர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.
இனவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே எமது கனவு, அந்த இலக்கை நோக்கி நாங்கள் நகர்ந்து வருகின்றோம்.
அரசமைப்புப் பணிகளுக்கு அனைத்துத் தரப்புகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan