குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு மற்றும் வாடகை கட்டுப்பாடு சட்டமூலங்கள் தொடர்பான அறிவிப்பு
அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்களை பாதுகாத்தல் மற்றும் வீட்டு வாடகை சட்டமூலங்கள் மீதான நீதிமன்றத்தின் முடிவைப் பெற்றுள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தற்போதைய வடிவில் இந்த சட்டமூலங்களை முன்னெடுத்துச் செல்லப் போவதில்லை என நீதி அமைச்சின் செயலாளர் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, இவை நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, புதிய சட்டமூலங்களாக மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
அரசாங்கத்தின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட மனுதாரர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களை மீளப் பெற்றுக்கொண்டனர்.

மனுக்கள் மீளப் பெறப்பட்டதால், அரசியலமைப்பின் 121(3) பிரிவின் கீழ் இந்த சட்டமூலங்கள் குறித்து முறையான தீர்ப்பை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த நீதிமன்றத் தீர்மானத்தை நாடாளுமன்ற உத்தியோகபூர்வ ஹன்சாட் அறிக்கையில் பதிவு செய்யுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri