கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நிதி திட்டமிடல் பிரதியமைச்சர்
தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜெயந்த கிளிநொச்சிக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த திடீர் விஜயம் இன்று(25.04.2026) இடம்பொற்றுள்ளது.
உப்பு உற்பத்தி
இதன்போது ஆனையிறவு பகுதியில் குறிஞ்சா தீவின் முந்தைய காலம் போன்று உப்பு உற்பத்தியை மேற்கொண்டு வந்த குறிஞ்சாதீவு பகுதியையும் அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
மேலும் இப்பகுதியில் மீண்டும் உப்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என்பதுடன் பலரது வாழ்வாதாரத்தை மேன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகளை பிரதியமைச்சர் ஜெயந்த பார்வையிட்டார்.
இதனையடுத்து, பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் கட்டுமாண பணிகளை பார்வையிடவதற்காகவும் சென்றுள்ளார்.
அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், க.இளங்குமரன், தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்,பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் தலைவர், முதலீட்டு சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.