இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டை அறிமுகம்
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த அட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய டிஜிட்டல்மயமாக்கலை முன்னெடுத்துச் செல்வதிலும், பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என அமைச்சு கூறியுள்ளது.
டிஜிட்டல் அட்டை
பிளாஸ்டிக் அட்டைகளுக்கு பதிலாக இந்த டிஜிட்டல் அட்டை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இது பங்களிப்பு வழங்கும்.

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை, இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.