பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு!
இலங்கையின் முக்கிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பது குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநுராதரபுரம் பொதுமக்கள் அமைப்பு (அநுராதபுரம் புரவெசி சங்விதான) குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.
மேற்குறித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுராதரபுரம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் நுவரவாவி அருகே வயல்நிலமொன்றை மண்நிரப்பி ஆடம்பர ஹோட்டல் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டுள்ளார்.
ஆணைக்குழுவில் முறைப்பாடு
குறித்த வயல் காணியை தனது அதிகாரத்தைக் கொண்டு மண் நிரப்பி, அங்கு ஹோட்டல் ஒன்றை நிரமாணித்துக் கொள்வதற்கான மணல், கருங்கல், செங்கல் மற்றும் சீமெந்து ஆகியவற்றை தனது கீழ் அதிகாரிகளைக் கொண்டு சேகரித்துக் கொண்டுள்ளார்.
அத்துடன் ஹோட்டல் நிர்மாணப் பணிகளுக்கு பொலிஸ் கட்டிடப் பிரிவின் பணியாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஊழியர்கiளும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுராதபுரத்தில் சேவையில் இருந்த காலத்தில் அவரது ஹோட்டலின் நிர்வாக உத்தியோகத்தர்களாக பொலிசாரே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போதைக்கு மேற்குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாகாணமொன்றின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதுடன், இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர சொகுசு வாகனம் ஒன்றையும் சொந்தமாக வைத்துக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக மாவனல்லை, காலி, கிரிபத்கொடை மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசங்களில் மர ஆலைகளையும் நடத்தி வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இத்துணை பெறுமதியான சொத்துக்கள் எப்படிக் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்துமாறு அநுராதபுர புரவெசி சங்விதான அமைப்பு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
