வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் அநீதியானது: பிரதி சுகாதார அமைச்சர் விசனம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது அல்ல என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி விசனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று(23.01.2026) காலை 8 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
48 மணி போராட்டம்
இலவச சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.
இதனால் வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளுக்கு வரும் நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறார் வைத்தியசாலை, தாய்மார் வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை உட்பட முக்கிய இடங்களில் போராட்டம் இடம்பெறவில்லை.
பிரதி சுகாதார அமைச்சர்
இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், "வைத்தியர்களில் ஒரு பிரிவினர் தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இது அநீதியான வேலைநிறுத்தப் போராட்டமாகும். வைத்தியர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் கூட அநீதியானவை. டிட்வா பேரிடரில் இருந்து மீண்டு வரும் சூழ்நிலையில் அவர்களால் கோரப்படும் கோரிக்கைகள் நியாயமானவை அல்ல” என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan