அனுமதியின்றி மரங்களை வெட்டிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான திருகோணமலை கோணேஸ்வரா கோவிலை அண்டிய பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை, ஐந்தாம் கட்டை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திருகோணமலையில் பிரசித்தி பெற்ற கோணேஸ்வர கோவிலை அண்டிய பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அனுமதியின்றி மரங்களை வெட்டியுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதி கிராம அதிகாரி பொலிஸாருக்கு
வழங்கிய தகவலை அடுத்து சந்தேக நபலை பொலிஸார் கைது செய்து திருகோணமலை
நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்திய போதே
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.