வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனின் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்த நடவடிக்கை

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனின் அன்றைய தினத்தில் இருந்து வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
கோரிக்கைகள்

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நிர்வாகத்தை குழப்பும் ஊழியர்களை இடமாற்றம் செய்யவேண்டும், சாலை முகாமையாளரை சாலையில் கடமையாற்ற விடவேண்டும், உதவி முகாமையாளரை எந்தவித அழுத்தமும் இன்றி கடமையாற்ற விடவேண்டும்.
மேலும் கொழும்பு பகல் சேவையை பகலில் ஆரம்பிக்க வேண்டும், எரிபொருள் செலவிலும் பார்க்க குறைந்த வருமானத்தை ஈட்டும் சேவையை மட்டுப்படுத்த வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
12.10. 2022 திகதிக்கு முன்னர் இவை நிறைவேற்றப்படவேண்டும். அதுதொடர்பில்
அறிவிப்பு இல்லாவிடின் திட்டமிட்டபடி அன்றிலிருந்து வேலை நிறுத்தம்
இடம்பெறுமென இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கங்கத்தின் பருத்தித்துறை
கிளை தெரிவித்துள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri