மாத்தறை பிரதேச செயலக ஊழியர்கள்: அடையாள வேலைநிறுத்த போராட்டம் (Photos)
மாத்தறை பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் இன்று(27) அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
தடுத்து வைப்பு
மாத்தறை பிரதேச செயலாளர் கௌசல்யா குமாரி சுகவீனம் காரணமாக மாத்தறை மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனை ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சுகாதார ஊழியர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கவில்லை என்று குற்றம் சாட்டியே மருத்துவமனை ஊழியர்கள் அவரை தடுத்து வைத்திருந்துள்ளனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகள் நேரில் மருத்துவமனைக்கு வந்து பிரதேச செயலாளரை மீட்டெடுத்துள்ளனர்.
வேலை நிறுத்தம்

பிரதேச செயலகம் எரிபொருள் விநியோகம் சம்பந்தமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாட்டிலிருந்து நேற்றைய தினம்(26) ஒதுங்கிக் கொண்டுள்ளது.
பிரதேச செயலாளர் தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதேச செயலக ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்துள்ள பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam