கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தகவல்: செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கையில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 192 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டன.
அந்தவகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் கடவுச்சீட்டு வழங்கல் 33 வீதத்தால் அதிகரித்து 5 இலட்சத்து 90 ஆயிரத்து 260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்காக மொத்தம் ஒரு இலட்சத்து ஆயிரத்து 777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,