அமெரிக்காவின் முக்கிய மாகாணத்தை விலைக்கு கேட்ட ஐரோப்பிய நாடு! அதிர்ச்சியில் ட்ரம்ப்
அமெரிக்காவிற்கு(USA) கிரீன்லாந்தை(Greenland) உரிமை கோரும் டொனால்ட் ட்ரம்பின் விருப்பத்திற்கு பதிலடியாக, கலிபோர்னியா மாநிலத்தை டென்மார்க் விலை பேசியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதிலிருந்து, பாதுகாப்பிற்கு கிரீன்லாந் அமெரிக்கா நிர்வாகத்தின் கீழ் இருப்பதே சிறந்தது என உரிமை கோரி வருகிறார்.
இந்த நிலையிலேயே டொனால்டு ட்ரம்புக்கு பதிலடி அளிக்கும் வகையில் டென்மார்க் மக்கள் களமிறங்கினர்.
மக்கள் ஆதரவு
அதாவது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை டென்மார்க் அரசாங்கம் வாங்க வேண்டும் என குறிப்பிட்டு மக்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இணைய தளம் ஒன்றை உருவாக்கி அதில் 200,000 மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மொத்தம் அரை மில்லியன் மக்களிடம் ஆதரவு திரட்ட இலக்காகக் கொண்டுள்ளனர்.
1 டிரில்லியன் டொலர்கள் செலவிட தயாராக இருப்பதாகவும் டென்மார்க் மக்கள் அறிவித்துள்ளனர்.
தேசிய நலன் கருதி நமது நாட்டின் அசாதாரண பாரம்பரியத்தை மேம்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு, இனி கலிபோர்னியா புதிய டென்மார்க்காக மாறும் என குறிப்பிட்டுள்ளனர்.
ட்ரம்பின் திட்டம்
தென் கலிபோர்னியாவில் டென்மார்க் மக்களின் செல்வாக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது. அமெரிக்காவின் டென்மார்க் தலைநகரம் என்றே அப்பகுதி அழைக்கப்பட்டு வருகிறது.
டென்மார்க்கின் அதே உள்கட்டமைப்புகள் கொண்ட அப்பகுதிக்கு டென்மார்க்கின் அரச குடும்ப உறுப்பினர்களும் அடிக்கடி விஜயம் செய்து வருகின்றனர்.
2019இல் ட்ரம்ப் தமது முதல் ஆட்சியின் போதும் கிரீன்லாந்தை உரிமை கொண்டாட முயன்றுள்ளார். அப்போது முடியாமல் போயுள்ளது.
ஆனால், அந்த கனவை நிறைவேற்ற ட்ரம்ப் மீண்டும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் இராணுவத்தை பயன்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ட்ரம்ப் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகர் மனைவி.. கோலாகலமாக நடந்த சீமந்தம், போட்டோஸ் இதோ](https://cdn.ibcstack.com/article/0f12e7dd-4f06-4f16-9cff-9dcc24c47c7e/25-67ac877857c80-sm.webp)
3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகர் மனைவி.. கோலாகலமாக நடந்த சீமந்தம், போட்டோஸ் இதோ Cineulagam
![ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்](https://cdn.ibcstack.com/article/423ae66b-1bac-45b7-8142-cac56bc06596/25-67aca2573815f-sm.webp)
ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் News Lankasri
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)