மார்க் ஜுக்கர்பெர்க்கு மரண தண்டனை விதிக்க முயற்சி! வெளியான அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தானில்(Pakistan), மத நிபந்தனையில் ஈடுபட்டதாக கூறி, தனக்கு மரண தண்டனை அளிக்கும் நிலை ஏற்பட்டது என மெட்டா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி(CEO), மார்க் ஜுக்கர் பெர்க்(Mark zuckerberg) தெரிவித்துள்ளார்.
இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Power of Pakistan
— Kreately.in (@KreatelyMedia) February 11, 2025
😂 pic.twitter.com/V4qokhbq76
மரண தண்டனை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன.
பேஸ்புக்கில் மத நிந்தனை செய்யும் வகையில் யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்காக எனக்கு மரண தண்டனை பெற்றுத்தர ஒருவர் முயன்றார்.
பேஸ்புக்கில் ஒரு நபர் நபிகள் நாயகத்தின் உருவம் என்று ஒன்றை வரைந்து பதிவிட்டார். அது தங்கள் கலாசாரத்தில் தெய்வ நிந்தனை என கூறி என் மீது வழக்குத் தொடரப்பட்டது.
கருத்து சுதந்திரம்
ஆனால், பாகிஸ்தானுக்கு செல்லும் திட்டம் ஏதும் இல்லாத காரணத்தினால் அந்த வழக்கை பற்றி நான் கவலைப்படவில்லை.
உலகில் பல்வேறு நாடுகளில் கருத்து சுதந்திரம் என்பதற்கு வெவ்வேறான மதிப்பீடுகள் உள்ளன.
அதேபோல், அந்த அரசாங்கங்கள் எங்களை முடக்கவும், சிறையில் அடைக்கவும் நினைக்கின்றனர். இதனை சிலர் சரி என கருதுகின்றனர்” என மார்க் ஜுக்கர்பெர்க் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
