தமிழ் மொழியை சிங்களம் மறுதலிப்பது மிக வக்கிரமான செயற்பாடு! - ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா
ஒரு நாட்டின் பிரஜை தன்னை அந்நாட்டின் எல்லாவற்றோடும் இணைத்துப் பார்த்து பூரிப்படையவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றவும் அவனது உள்ளுணர்வு இயல்பாகாகத் தூண்டுவதற்கு அந்தப் பிரஜைக்குரிய கவுரவத்தை அரசாங்கம் என்றவகையில் ஆளுந்தரப்பு உறுதிப்படுத்தியாக வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கட்சியரசியலில் மக்கள் விருப்பை மதித்து அரங்கேறும் ஓர் அடிப்படை விருப்பை நிறைவேற்றும் செயற்பாட்டை ஒரு கட்சி முன்னெடுத்து உறுதிப்படுத்தினால் அதை மறுகட்சி தடுக்கும் செயற்பாடு மக்கள் விருப்பில் அரசியல் சாயம் பூசி வக்கிரத்தோடு அனுகுவதாக அது அமைந்துவிடும்.
கடந்த அரசாங்கம் உறுதிப்படுத்திய மொழி ரீதியான சமநிலை மதிப்பும் உரிமையும் இந்த அரசாங்கத்தால் மறுக்கப்படுகின்ற போது மக்கள் மனதில் வெறுப்பைத் தவிர வேறு எதையும் அது விதைப்பதில்லை.
தனது மொழி உரிமை மதிக்கப்படும் போதுதான் ஒருவர் தன்னை தன்மண்ணோடு பிணைத்துக் கொண்டு கர்வத்தோடு நெஞ்சுயர்த்திநிற்கும் உணர்வை கௌரவத்தோடு விதைக்கும் இந்தக் கௌரவமே நாட்டுப்பற்றின் அடிப்படை நாதமாகும்.
இப்போதுள்ள அரசாங்கம் அந்த உணர்வைச் சிதைத்துவிட்டு ஒரே நாடு என்ற எதிர்பார்ப்பை விதைக்க முயல்கின்றது. இரு வேறு உணர்வுள்ள நிலையைத் தோற்றுவித்து ஒரு மொழியை முழுமையாக மறுதளித்து தேசப்பற்றை வலியுறுத்தும் செயற்பாட்டுக்கு பாகுபாடுள்ள வக்கிரம் என்பதைத் தவிர வேறு எதுதான் பொருத்தமாக இருக்கும்.
மக்களின்மனதில் இருக்கின்ற பிரிகோடுகளை அகற்றி ஒருமைப்பாட்டை விதைப்பதில் தேசிய தினத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்த அரசாங்கம் அந்த ஒருமைப்பாட்டைச் சிதைப்பதில் ஏன் இத்தனை ஆர்வமாக இருக்கின்றது என்பது சிந்திக்க வேண்டியதொன்றாகும்.
தேசிய ஒருமைப்பாட்டைச் சிதைத்து ஒரு தேசிய நிகழ்வு அரங்கேறும் போது அது நிச்சயம் கண்டிக்கத்தக்கதாகும். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மொழி உரிமைக்காக நாம் ஓரணியில் நின்று எமது கண்டனத்தைப் பதிவு செய்வதும் மிகவும் முக்கியமான விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
கிளை யின் தலைவரான -ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா-தெரிவித்தார்





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
