ஜனாதிபதியுடனான சந்திப்பில் அனுமதி மறுக்கப்பட்ட கிளிநொச்சி விவசாயிகள்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் தமது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்கு எவரும் அனுமதியளிக்கவில்லை என கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளில் சம்மேளனத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினர் இன்றைய தினம் (10.01.2024) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஊடக சந்திப்பின் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
அனுமதி மறுப்பு
“கடந்த வாரம் கிளிநொச்சி பகுதிக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளில் சம்மேளனத்தினரையும் அழைத்திருந்தார்.
விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு விதமான பிரச்சினைகளை கதைப்பதற்காக அங்கு சென்றிருந்த பொழுது, ஜனாதிபதியிடம் கதைப்பதற்கு எவரும் அனுமதியளிக்கவில்லை.
அப்படி இருக்கையில் எதற்காக ஜனாதிபதி எம்மை அழைத்தார்.
இவ்வருடம் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்ட சில நாட்கள் மழையின்மையால் தண்ணீர் இன்றி பெரிதும் அவதி உற்றனர்.
நெற்செய்கையில் பாரிய பாதிப்பு
பின்னர் நோய் தாக்கம் காரணமாக நெற்செய்கையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தற்பொழுது ஏற்பட்டுள்ள சீறற்ற காலநிலை காரணமாக பலரது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பேரழிவை எதிர்கொண்டுள்ளன.
இதற்கு விவசாயக் காப்புறுதி திணைக்களம் இது வரையில் எந்த பகுதிக்கும் சென்று அழிவு தொடர்பாக பார்வையிடவில்லை.
இதற்கமைய இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாயிகளையும் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
