தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம்: நோயாளர்கள் அவதி
அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதனால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறை போராட்டம் இன்றும் (10.01) நாளையும் (11.01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பொது வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் பணிக்கு சமூகமளிக்காமையினால் வைத்தியசாலையின் சேவைகள் பல ஸ்தம்பிதமடைந்திருந்தது.
குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே, அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகரகள், பற்சிகிச்சை நிபுணர்கள், மருந்து கலவைகள் நிபுணர்கள், ,சீஜி தொழில்நுட்ப நிபுணர்கள், ஈஈஜி தொழில்நுட்ப நிபுணர்கள், கண் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.








Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
