செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு மறுப்பு : கிழக்கு ஆளுநரின் நடவடிக்கை
மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன், வாகரை பிரதேச செயலாளர் அருணன், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் தஜீவரன் உட்பட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
ஆளுநர் வழங்கிய பதில்
இந்த கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடமும் கேள்வியெழுப்பப்பட்டது.
எனினும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவ்வாறு ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டிருந்தால் இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்த திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தமாட்டோம் என கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
வாகரையில் இல்மனைட் தொழிற்சாலை மற்றும் இரால் வளர்ப்பு பண்ணைக்கு எதிராக வாகரை பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
