வடக்கு மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு! - 27 நாட்களில் 265 நோயாளர்கள் அடையாளம்
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதன் வெளிப்பாடாகக் கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வடக்கு மாகாணத்தில், இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் 265 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நிலைமை நீடித்தால், எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடையும் அபாய நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது வாழ்விடங்கள், பணியிடங்கள் உட்பட பொது இடங்களையும்
சுத்திகரித்து, நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை அழிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
